Tuesday 5 May 2020




ஜெயமோகன் 1990இல் எழுதிய நாவல். ஒரு வினோதமான வாசிப்பு. பெரும் வணிகர்கள்  தடுமாற்றம் அடைய வாய்ப்பு கிட்டுவது அரிது. அப்படியே தடுமாறினாலும் பணம் காக்கும். அப்படிப்பட்ட ஒரு நிலையில்
(செல்வந்தர்கள்) தங்களை உருமாற்றி கொள்ளும் ஒரு பெருத்த குடும்பம் கதையின் மாந்தர்கள்.பணம் சுரண்டப்பட்டதன் விளைவு, ரப்பர் தோட்டம்.

செல்வம் நிறைந்து இருக்கும் வணிகக் குடும்பம் பெருவட்டயன் குடும்பம். பெரியவர் செல்லையா பெருவட்டயன். பொன்னு பெருவட்டயன் அடுத்த தலைமுறை. திரேஸ் இவரது மனைவி. இரு பிள்ளைகள் அடுத்த தலைமுறை கணக்கு. பிரான்சிஸ் மற்றும் லிவி. ஆக ஒருவரின் சுரண்டல் மூன்று தலைமுறை வரை காத்து நிற்கும் படலம். உழைப்பின் வாசம் பெரிதும் அறிந்திராத நிலை.

ரப்பர் அந்நிய முதலீடு செய்யும் வணிகப்பொருள். இடையில் இருக்கும் அல்லக்கைகள் நன்கு பதம் பார்க்கிறது பொன்னு பெருவட்டயன் அவர்களை. வீட்டில் அப்பா உடல் நிலை சரி இல்லாமல் இருக்கும் நிலை. அனைவரும் குசலம் விசாரிக்க வீட்டிற்கு வந்த வண்ணம்,வியாபாரம் கடி,அனைவரது ஏளனப்பார்வை. சுயம் தப்பாமல் குற்ற உணர்ச்சியின் வெள்ளப்பெருக்கு. பிரான்சிஸ் பெரியவரின் விம்பம்.

அன்பு பாராட்டும் விதம் அங்கே மட்டும் சாத்தியம். வீட்டினை அலங்கரிக்கும் அனைத்தும் ஒரு வகை துயரமாக மட்டும் இருக்கிறது. பணம் மட்டும் அங்கே பிரதான மொழி. கிழவர் சரிந்தபிற கு நடக்கும் அனைத்து சம்பவங்களும் அதற்கு சான்று. தங்கம், லிபி,பிரான்சிஸ் என அனைத்து மாந்தர்களும் சுய வெறுப்பின் உச்சம்.
அவர்களின் இயலாமை வெறுப்பாக உமிழ் கிறது.

லாரன்ஸ்,கண்டகானி பெயரன். ஆதிவாசி கோலம் கலையாமல் அப்படியே ஒன்றி இருக்கும் விதம் லயம். பிரான்சிஸ் இறுதியில் யாரும் தனக்கான வர்கள் இல்லை என்று உணரும்போது வாழ்க்கை உணர்கிறான். தாத்தா மட்டும் தன்னை உண்மையாக நேசித்தார் என்னும் ஒரு புள்ளி அவர் வரைந்து கொடுத்த பாதையில் எடுத்து செல்கிறது.

அனைத்து கதாபாத்திரங்களும் ஒருவரின் இயலாமையை எண்ணி அதித ஆனந்தம் அடையும் விதம் சுயம் காக்கும் பொருட்டு நடத்தும் போர் ஆக தெரிகிறது.

Descriptions நிறைந்த பக்கங்கள் ஒரு நொடி இது ஜெயமோகன் எழுத்து நடையா என்று யோசிக்க தூண்டுகிறது.
ரப்பர் கண்கூசும் வெளிச்சத்தை வெளி கொணர்கிறது.

பிரான்சிஸ் கதையின் அச்சாணி. அவனின் விசாலம் அறிய இன்னும் பக்கங்கள் ஒதுக்கி இருக்கலாம்.
கேரள சாரல் அல்லாமல் ஜெயமோகன் கதை களம் இல்லை. இதுவும் அதனுள் அடக்கம்.

~வாசியுங்கள். நேசியுங்கள்.
~அழகு.
#9/25

No comments:

Post a Comment

SAPIENS

//Sapiens A Brief History of Humankind by Yuval Noah Harari//                                                                ...